
முற்றிலும் பொய் - இலங்கை மத்திய வங்கி விளக்கம்!
December 4, 2022 11:34 am
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்பட்டு பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற ஊகம் முற்றிலும் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் எந்தவித மாற்றமும் இன்றி தற்போதைய சலுகைகளை தொடர்ந்து அனுபவித்து வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.