
அமெரிக்காவிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு பயணிகள் கப்பல்
December 4, 2022 12:45 pm
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த "Azamara Quest" என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (04) பிற்பகல் வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (03) பிற்பகல் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த கப்பலில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவினர் நாளை (05) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைய உள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டப்படவுள்ள இரண்டாவது கப்பல் இதுவாகும்.