
போட்டியின் போது விபத்து - சாமிக்க வைத்தியசாலையில்
December 7, 2022 08:48 pm
Galle Gladiators மற்றும் Kandy Falcons அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இலங்கையின் வீரர் சாமிக்க கருணாரத்ன விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Catch ஒன்றை பிடிக்க முயன்ற போது பந்து அவரது முகத்தில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.