
கிரிக்கெட் அணிக்குத் தலைமை தாங்கும் ராகுல் டிராவிட் மகன்!
January 20, 2023 06:33 am
ராகுல் டிராவிடின் இளைய மகன், கர்நாடக யு-14 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிராவிடின் இளைய மகன் அன்வே டிராவிட், விக்கெட் கீப்பராகவும் நல்ல பேட்டராகவும் இருப்பதால் அவருக்குப் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது. கேரளாவில் நடைபெறும் போட்டி ஒன்றில் கர்நாடக யு-14 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் அன்வே டிராவிட்.
பிரபல பேட்டராகப் பெயர் பெற்ற ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராகவும் இந்திய அணியில் பணியாற்றியுள்ளார். அதுபோல அவருடைய இளைய மகனும் விக்கெட் கீப்பர் பேட்டராகப் பெயர் எடுத்து தற்போது கேப்டன் ஆகியுள்ளார்.
டிராவிடின் மூத்த மகன் சமித் டிராவிட், யு-14 அணியில் இடம்பெற்று இரு இரட்டைச் சதங்கள் அடித்து கவனம் பெற்றார். தற்போது அடுத்த மகனும் அதே வழியில் தந்தைக்குப் பெருமை சேர்க்கத் தயாராகிவிட்டார்.
கேரளாவில் ஜனவரி 23, பிப்ரவரி 11 ஆகிய திகதிகளில் அன்வே டிராவிட் பங்கேற்கும் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.