
சீட் பெல்ட் விவகாரம் - பிரதமருக்கு அபராதம்!
January 22, 2023 05:56 am
அரசின் திட்ட விளக்க விடியோவில் பேசுவதற்காக காரில் செல்லும்போது தனது சீட் பெல்ட்டை கழற்றிய பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குக்கு போலீஸாா் 100 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனா்.
இது குறித்து பொலிஸாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லண்டனைச் சோ்ந்த 42 வயது நபா் (ரிஷி சுனக்) ஓடும் காரில் தனது சீட் பெல்ட்டை கழற்றிய விடியோ காட்சியை சமூக ஊடகங்களில் கண்டோம். அது உண்மையான சம்பவம் என்பது உறுதியானதை அடுத்து, அந்த நபருக்கு 100 பவுண்ட் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விடியோவில் பேசுவதற்காக சீட் பெல்ட்டைக் கழற்றியது தவறு என்று ரிஷி சுனக் வருத்தம் தெரிவித்திருந்தாா்.