Back to Top

வேன், முச்சக்கரவண்டி சாரதிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வேன், முச்சக்கரவண்டி சாரதிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

January 22, 2023  10:58 am

Bookmark and Share
விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் நள்ளிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதன்படி, ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த சாரதியான தினேஷ் குமார்யின் இறுதிக் கிரியைகள் நாளை (23) இடம்பெற்று, ஹட்டன் குடாஓயா பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Most Viewed