
ஆனந்த மற்றும் சஞ்சீவ தம்மிக்க கைது
January 24, 2023 07:01 am
மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.