
மின் கட்டண திருத்தம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
January 24, 2023 08:29 am
2009 மின்சாரச் சட்டத்தின் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இடைக்கால கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்ட ஆலோசனையைப் பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.