
ஆனந்த மற்றும் சஞ்சீவ தம்மிக்க விளக்கமறியலில்
January 24, 2023 01:53 pm
மின் பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய போதே இந்த உத்தரவை வழங்கியுள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.