Back to Top

SLIM Brand Excellence Awards 2022 இல் Diva Power பெரும் பாராட்டை பெற்றது

SLIM Brand Excellence Awards 2022 இல் Diva Power பெரும் பாராட்டை பெற்றது

January 24, 2023  01:55 pm

Bookmark and Share
அண்மையில் இடம்பெற்ற SLIM Brand Excellence Awards 2022 இல், முன்னணி வீட்டுப்பாவனை சலவை வர்த்தக நாமமான Diva இவ்வருடத்தின் சிறந்த புதிய வரவு சின்னத்திற்கான வெண்கல விருதை தட்டிச் சென்றது. இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகநாமங்களின் வலுவான போட்டிக்கு மத்தியில் Diva Power இந்த விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 இல் ஆரம்பிக்கப்பட்ட Diva Power வர்த்தகநாமத்தினால், நாட்டின் சலவைத் துறையில் மிக விரைவாக புரட்சியை ஏற்படுத்தவும் இலங்கையர்களின் இதயங்களை வெல்லவும் முடிந்துள்ளது. Diva Power, கட்டுப்படியாகும் விலையிலான சலவைத் தயாரிப்பாக இருக்கும் அதே வேளையில், ஆடைகளுக்கு பாதுகாப்பு மற்றும் சிறந்த சுத்தத்தை வழங்குவதில் புகழ்பெற்றுள்ளது. கிருமிகளிலிருந்து 99.9% பாதுகாப்பை வழங்கும் Diva Power Germ Guard மற்றும் நிறம் மங்குவதைத் தடுப்பதன் மூலம் ஆடைகளைப் பாதுகாக்கும் Diva Power Colour Guard ஆகிய இரண்டு வகைகளில் Diva Power கிடைக்கிறது.

இவ்விருது வென்றமை தொடர்பில், Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டு பராமரிப்பு பிரிவின் தலைவி திருமதி அனுஷ்கா சபாநாயகம் கருத்துத் தெரிவிக்கையில், “அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே வருடங்களில் Diva Power அதன் முன்னேற்றத்தைப் பறைசாற்றும் இந்த அங்கீகாரம் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். சந்தையில் ஒரு இளம் வர்த்தகநாமமாக இருப்பதனால், மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள வர்த்தகநாமங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளமையானது ஒரு பெரிய சாதனையாகும். இவ்விருதானது, Diva வர்த்தகநாமத்தையும், அவ்வர்த்தகநாமத்துடன் கூடியுள்ள விசுவாசமான நுகர்வோருக்கும் உயர்தர சலவை தீர்வுகளை வழங்குவதற்கான அதன் முயற்சிகளையும் மேலும் வலுவடையச் செய்கிறது. என்றார்.

Diva ஆனது, அனைத்து சமூகப் பிரிவைச் சேர்ந்த இலங்கையர்களால் விரும்பப்படும் ஒரு வீட்டுப் பாவனை வர்த்தக நாமமாகும். அத்துடன் இந்த வர்த்தகநாமத்தை சூழ்ந்திருக்கும் விசுவாசமான நுகர்வோர் தளமானது, இவ்வர்த்தகநாமம் சிறந்த சலவைத் தயாரிப்புகளை வழங்குவதில் கொண்டுள்ள அதன் அக்கறைக்கு ஒரு உண்மையான சான்றாகும். கடந்த சில காலத்திற்குள் Diva வர்த்தகநாமமானது, சலவைத் துறையில் ஒரு முக்கிய வீரனாக மாறி வந்துள்ளதோடு, இத்தொழில்துறையில் உள்ள ஜாம்பவான்களுடன் அது போட்டியிட்டு வருகிறது. Diva Power தூள், திரவம், Diva சவர்க்காரம், Diva Fresh சலவைத் தூள் ஆகியவற்றை உள்ளடக்கிய தயாரிப்பு வகைகளால் Diva பலப்படுத்தப்பட்டுள்ளது. அவை வெவ்வேறு வகைகளிலும் மாறுபட்ட பொதி அளவுகளிலும் கிடைக்கின்றன.

உச்ச வகையில் நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமம் எனும் வகையில், Diva தனது பயணத்தின் ஒரு அங்கமாக உள்ள அதன் விசுவாசமான நுகர்வோர் தளத்திற்கும், வர்த்தகநாமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள அபரிமிதமான நம்பிக்கைக்கும் Diva தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Hemas Consumer பற்றி  

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆனது, Hemas Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 1948 இல் நிறுவப்பட்ட Hemas, குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று, 4,500 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட முன்னணி மக்கள் மைய நிறுவனமாக உள்ள இது, நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வருகிறது. Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து வருவதோடு, அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றி கொள்கிறது.

Most Viewed