
மின்வெட்டு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
January 24, 2023 05:37 pm
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 23 ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தது.
ஆனால் இரு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனவரி 25 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணையில் பங்கேற்குமாறு இரு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.