Back to Top

மூன்றாவது 'அருணலு சித்திரம்' விருது விழாவில் இளம் ஓவியர்களுக்கு 3 மில்லியன் ரூபாவை பரிசாக வழங்கிய கொமர்ஷல் வங்கி

மூன்றாவது 'அருணலு சித்திரம்' விருது விழாவில் இளம் ஓவியர்களுக்கு 3 மில்லியன் ரூபாவை பரிசாக வழங்கிய கொமர்ஷல் வங்கி

February 6, 2023  05:29 pm

Bookmark and Share
இலங்கையின் மிகவும் திறமைமிக்க சிறுவர் ஓவியர்கள் சிலரும் அவர்களது பெற்றோர்களும் அண்மையில் கொமர்ஷல் வங்கியால் நடத்தப்பட்ட மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெருமைக்குரிய பாராட்டு விழாவில் பங்கேற்றனர். ´அருணலு சித்திரம் 2022 ஓவியப் போட்டி´ இன் வெற்றியாளர்களைப் பாராட்டும் விழாவே அதுவாகும். இந்தப் போட்டிக்கு நாடு முழுவதும் இருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஓவியங்களை அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கொமர்ஷல் வங்கி 137 இளம் ஓவியர்களை கௌரவித்தது. இவர்கள் மத்தியில் மூன்று மில்லியன் ரூபாய் பரிசாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வின் இறுதியில் இவர்களுக்கான ஓவிய செயலமர்வு ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சுமார் 100 சிறுவர்கள் இந்த செயலமர்விலும் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுசிரிபால மாலிம்பொட தலைமையிலான நடுவர்கள் குழு இந்த செயலமர்வை நடத்தியது. இளம் ஓவியர்கள் தமது திறமைகளை மேலும் மெருகேற்றும் வண்ணம் ஓவியக் கலையின் பல நுணுக்கமான விடயங்கள் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. இதனால் அவர்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது என வங்கி அறிவித்துள்ளது.

மூன்றாவது ´அருணலு சித்திரம்´ ஓவியப் போட்டி 2022 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. 4 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் ஐந்து வகைப்படுத்தலின் கீழ் இதில் பங்கேற்றனர். வங்கியின் பிரபலமான சிறுவர் சேமிப்புத் திட்டமான அருணலு முத்திரையின் கீழ் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. றறற.யசரயெடரளiவாவாயஅ.டம . இணையத்துக்கு விஜயம் செய்து தங்களது ஓவியப் படைப்புக்களை தரமேற்றுமாறு போட்டியாளர்கள் கேட்கப்பட்டிருந்தனர்.

மிகவும் இளவயது பிரிவான முன் ஆரம்பப்பள்ளி பாடசாலை வகைப்படுத்தலின் கீழ் போட்டியிட்டவர்களில் 25 பேருக்கு வங்கி தலா பத்தாயிரம் ரூபா வீதம் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கியது. இதே பிரிவில் மேலும் 50 பேருக்கு திறமைக்கான நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆரம்ப பிரிவுரூபவ் ஆரம்ப பிரிவுக்கு பிந்தியரூபவ் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வகைப்படுத்தலின் கீழ் முதலிடத்தை பிடித்த வெற்றியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் பணப்பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பிரிவுகளின் கீழ் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு 75 ஆயிரம் ரூபா வீதமும் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதமும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலதிகமாக இந்தப் பிரிவுகளில் 25 போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசாக 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டன.

மேலும் 200 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்கரூபவ் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ் பிரபாகர் மற்றும் கூட்டாண்மை முகாமைத்துவப் பிரதிநிதிகள் வோட்டர்ஸ் எட்ஜ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.