
நபர் ஒருவருக்கு 8 ஆயுள், 88 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு!
March 15, 2023 10:05 pm
சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆயுள் தண்டனையும் 88 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
7 பெண்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோதமாக வேறு நாட்டிற்குள் பிரவேசித்தமை போன்ற குற்றங்களிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட பெண்ணின் கைத்தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய சந்தேகநபர் 2021ஆம் ஆண்டு பொலிஸாரால் முதலில் கைது செய்யப்பட்டார்.