Back to Top

செய்யாத குற்றத்திற்காக 34 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் விடுதலை

செய்யாத குற்றத்திற்காக 34 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் விடுதலை

March 17, 2023  10:20 am

Bookmark and Share
பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிட்னி ஹோல்ம்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என அறியப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1988ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த கும்பல் பொதுமக்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இதனையொட்டி எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மாநிற வாகனத்தை அடையாளம் கண்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்திற்கு சொந்தமான நபரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் ஏற்கெனவே இதேபோன்ற வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்து குற்றம்சாட்டப்பட்ட சிட்னி ஹோல்ம்ஸ் எனும் நபருக்கு 400 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர்.