Back to Top

களவானையில் தேயிலை செய்கையாளர்களுக்கு திரிஷக்தி நிலைத்தன்மை தொழில்முயற்சி அபிவிருத்தி திட்டத்தை அமுல் செய்த கொமர்ஷல் வங்கி

களவானையில் தேயிலை செய்கையாளர்களுக்கு திரிஷக்தி நிலைத்தன்மை தொழில்முயற்சி அபிவிருத்தி திட்டத்தை அமுல் செய்த கொமர்ஷல் வங்கி

March 17, 2023  02:22 pm

Bookmark and Share
களவானைப் பிரதேசத்தில் உள்ள சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் தேயிலை செய்கையாளர்களும் அண்மையில் கொமர்ஷல் வங்கியின் திரிஷக்தி நிலைத்தன்மை தொழில்முயற்சி அபிவிருத்தி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கென வங்கி பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வு கருத்தரங்கொன்றை அண்மையில் நடத்தியது. தேயிலை ஆராய்ச்சி நிலையம் (TRI) மற்றும் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அபிவிருத்தி அதிகார சபை (TSHDA) என்பனவற்றின் அனுசரணையோடு இத்திட்டம் அமுல் செய்யப்பட்டது. களவானை றம்புக்கனை விகாரையில் இம்பெற்ற இந்நிகழ்வில் 100க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். மர நடுகை வைபவம் ஒன்றுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.

மண்வள புனரமைப்பு மற்றும் மீள்செய்கை தேயிலை செய்கையில் இயந்திரங்களின் பாவனை சிறு தேயிலை உரிமையாளர்களுக்கான வங்கியின் கடன் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் என்பன பற்றி இந்நிகழ்வில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தேயிலை ஆராய்ச்சி நிலையம் (TRI) மற்றும் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அபிவிருத்தி அதிகார சபை (TSHDA) என்பனவற்றின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆற்றல் அபிவிருத்தி செயலமர்விலும் பங்கேற்றனர். TRI அதிகாரிகள் பிரத்தியேகமாக மண்வள பரிசோதனை மண்ணின் காபன் அளவு மற்றும் போஷாக்கு பற்றிய விளக்கங்கள் பூச்சி இனங்களை அடையாளம் காணல் மாதிரி இலைகள் சேமிப்பு என்பன உட்பட பல்வேறு நடமாடும் சேவைகளையும் நடத்திக் காட்டினர். கொமர்ஷல் வங்கியின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் ஊவா மற்றும் சப்பிரகமுவ மாகாணங்கள் உள்ளடங்களாக மலைநாட்டில் தேயிலை செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் நன்மை கருதி இவ்வாறான வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க தாங்கள் உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார்.

நிகழ்வின் பிரதான அமைப்பாளர்களான வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஊவா மற்றும் சப்பிரகமுவ சமின்த களுகமகே வங்கியின் களவானை கிளை முகாமையாளர் வஜிர ரத்னாயக்க ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

TSHDA வின் இரத்தினபுரிக்கான உதவி பிராந்திய முகாமையாளர் நன்தன விஜேசிங்க வலய தேயிலை அபிவிருத்தி அதிகாரி சிசிர பெரேரா சிரேஷ்ட ஆலோசனை அதிகாரி TRI ஜனக மகிந்தபால TRI இன் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி டொக்டர் சம்பத் பதிரனகே ஆகியோர் தொழில்நுட்ப அறிவினை பகிர்ந்து கொண்டனர். கொமர்ஷல் வங்கி இரத்தினபுரி கிளையின் விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவின் அதிகாரி புத்திக மதுரப்பெரும இந்நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டார்.