Back to Top

SLT-MOBITEL Enterprise இனால் பரிபூரண புத்தாக்கமான தீர்வுகளுடன் MSMEகளுக்கு வலுவூட்டல்

SLT-MOBITEL Enterprise இனால் பரிபூரண புத்தாக்கமான தீர்வுகளுடன் MSMEகளுக்கு வலுவூட்டல்

March 17, 2023  02:40 pm

Bookmark and Share
நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு தமது வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்திக் கொள்ளவும், டிஜிட்டல் செயற்பாடுகளில் புதிய அம்சங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு வலுவூட்டும் வகையிலும், SLT-MOBITEL Enterprise இனால், பரிபூரண மற்றும் புத்தாக்கமான தீர்வுகளான Bizlife packages, SLTM DataOne மற்றும் Hosting Cub போன்றன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க அடங்கலாக SLT-MOBITEL சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், தமது வியாபாரச் செயற்பாடுகளுக்கு இந்த புதிய தீர்வுகளினூடாக வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் வசதிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும், வியாபார வளர்ச்சிக்கு அவை எவ்வாறு உதவிகளை வழங்குகின்றன என்பதை அறிந்து கொள்ளவும் உதவியாக அமைந்திருந்தது.

BizLife packages இனால் வாடிக்கையாளர்களின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தேவைகளுக்கு பொருத்தமான பல்வேறு தீர்வுகள் வழங்கப்படுகின்றன. SLTM DataOne இனால், தனி நிறுவனத்தின் சகல கிளைகள் அல்லது பிரிவுகளையும் உள்வாங்கி மொத்தமான டேட்டா வசதிகளும் வழங்கப்படுகின்றது. Hosting Cub facility இனால், நிறுவனத்தின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பகிரப்பட்ட மற்றும் VSP பதிவிடல் போன்றன சகாயமான விலைக்கு வழங்கப்படுகின்றன.