
வரி தொடர்பான பிரச்சினைக்கான காலவரையறை
March 17, 2023 06:53 pm
உழைக்கும் வருமானத்தின் மீதான வரி தொடர்பான நிவாரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது உறுதியான காலவரையறை தயாரிப்பதற்கு ஜனாதிபதியின் செயலாளர் இணங்கியுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளருடன் இன்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு தொழிற்சங்கங்களுடன் நேரடி கலந்துரையாடலுக்கு தயார் என ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை ஏற்று முடிவுக்கு வந்தது.
இதன்படி அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் இன்று தொழில்சார் தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.