Back to Top

நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும்

நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும்

March 17, 2023  08:24 pm

Bookmark and Share
இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட செய்தியாளர் மாநாடொன்றும் நடத்தப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஆகியோரும் இணையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இன்று தெரணாவின் ´பிக் போகஸ்´ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.