
இந்திய-இலங்கை வர்த்தக நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்திய ரூபாய் Nostro கணக்கை செலான் வங்கி ஆரம்பித்துள்ளது
March 18, 2023 08:07 am
அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, மும்பாய்,
இந்தியன் வங்கியுடன் இந்திய ரூபாய் (INR) Nostro கணக்கை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, இரு நாடுகளுக்குமிடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில்
ஈடுபடுவோருக்கு, பரஸ்பர அனுகூலமளிக்கும் வகையில் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை
மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சார்க் பிராந்தியத்தினுள் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்திய
ரூபாயை ஏற்றுக் கொள்ளக்கூடிய அந்நிய நாணயமாக இலங்கை மத்திய வங்கி
அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் செலான் வங்கியின் சர்வதேச
செயற்பாடுகளுக்கான உதவி பொது முகாமையாளர் திலன் விஜேகுணவர்தன கருத்துத்
தெரிவிக்கையில், “இலங்கையும் இந்தியாவும் பரஸ்பர வணிக பங்காண்மை வளர்ச்சியை
அண்மைக்காலமாக அனுபவித்த வண்ணமுள்ளன. இந்தியன் வங்கியுடன் எமது Nostro
கணக்கை ஆரம்பித்துள்ளமையினூடாக, வர்த்தக, பணப் பரிமாற்றங்கள் மற்றும் திறைசேரிசார்
கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். எமது பெறுமதி
வாய்ந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கு இரு நாடுகளுக்குமிடையே
சர்வதேச வியாபாரங்களை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும் என
எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக எமது சந்தையை நாம் மேலும்
வலிமைப்படுத்தியுள்ளோம்.” என்றார்.
116 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் நிதிச் சேவைகள் துறையில் பிரசன்னத்தைக்
கொண்டுள்ள இந்தியன் வங்கியுடனான இந்தப் பங்காண்மையினூடாக, செலான் வங்கிக்கு
அதன் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரூபாயில் கொடுக்கல் வாங்கல்களை
மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்க டொலர்கள் அல்லது இதர
சர்வதேச நாணயங்களில் வியாபாரங்கள் அல்லது பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்
தேவையை இல்லாமல் செய்துள்ளது.
செலான் வங்கி பற்றி
அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான
கணக்குகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க
வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன்
செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும்
வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, நாடு முழுவதிலும் 540 க்கும் அதிகமான
வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் அலகுகளைக் கொண்டுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால்
செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-’(lka) ஆக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
அதனூடாக செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும்
அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு
சான்றாகும்.