Back to Top

பூரு மூனாவை தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி

பூரு மூனாவை தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி

March 18, 2023  12:25 pm

Bookmark and Share
´பூரு மூனா´ எனப்படும் ரவிந்து சங்க டி சில்வாவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (17) அவிசாவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 10க்கும் மேற்பட்ட கொலைகளில் ஈடுபட்டவர்.

´பூரு மூனா´ எனப்படும் ரவிந்து சங்க டி சில்வா, ஹங்வெல்ல பிரதேசத்தில் கடையொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்த வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொன்றது உட்பட பல கொலைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஆவார்.

பொலிஸாரைத் தவிர்த்துவிட்டு தலைமறைவான அவர் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் விமான நிலைய பொலிஸாரிடம் இருந்து மிக நுணுக்கமாக தப்பிச் சென்ற அவர் மீண்டும் பொலிஸாரை தவிர்த்து தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.