Back to Top

திருமண வீட்டில் மோதல் - ஒருவர் பலி

திருமண வீட்டில் மோதல் - ஒருவர் பலி

March 18, 2023  01:50 pm

Bookmark and Share
நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபராவார்.

சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.