Back to Top

70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

March 18, 2023  02:59 pm

Bookmark and Share
70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) இரவு காலி முகத்துவாரப் பகுதியில் வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியைக் கைது செய்துள்ளனர்.

லொறியின் சாரதி இருக்கைக்கு அருகில் ஒரு பையில் 49,500 ரூபா பணமும், சாரதி இருக்கைக்கு அடியில் 3 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ​​சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு சாரதியை விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மீன் வியாபாரி என பொலிஸார் தெரிவித்தனர்.