வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் அனுசரணையுடன் நொதேண் விளையாட்டு கழகம் நடாத்திய மரபியல் பொங்கல் விழா, செங்குந்தா இந்து கல்லூரி மைதானத்தில் இன்று (18) இடம்பெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் K.P. மஹிந்த குணரத்ன, 512 ஆவது பிரிகேட் கட்டளை தளபதி பிரிகேடியார் L.G.J.N. ஆரியதிலக, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ. இளங்கோவன், வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் மற்றும், பிரதேச செயலர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வாலை அம்மன் சனசமூக நிலையத்திலிருந்து விருந்தினர்கள் மரபியல் பண்பாட்டோடு அழைத்து வரப்பட்டு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
( ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஐனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முடிவுகட்டப்பட வேண்டும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்றார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-