Back to Top

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இலங்கை அணி!

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இலங்கை அணி!

March 19, 2023  07:54 am

Bookmark and Share
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 580 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன அதிகபட்சமாக 89 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மெட் ஹென்ரி மற்றும் மிச்சல் பிரஷ்வெல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன்படி, 416 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நிலையில் சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி மூன்று ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.