
ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு குறித்து இன்று கலந்துரையாடல்
March 19, 2023 10:24 am
ஆசிரியர் இடமாற்ற சபையை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை (20) கல்வி அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்காவிடின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக அரசாங்கம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது.
எனினும், தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.