Back to Top

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு !

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு !

March 19, 2023  12:05 pm

Bookmark and Share
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மூன்றாம் இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த பழுதால் மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.