
திமுத் மீண்டும் அரைச்சதம்!
March 19, 2023 12:55 pm
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 32வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
எவ்வாறாயினும், நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிம் சவுதியின் பந்து வீச்சில் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை அவர் ஆட்டமிழந்து வௌியேறியிருந்தார்.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கு 580 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் முதல் இன்னிங்ஸில் 164 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இந்நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி இன்னும் 303 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.