
விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலி!
March 19, 2023 08:48 pm
கல்கமுவ, பாலுகடவல, அதரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.