
யாழில் போராட்டம்
March 15, 2023
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக யாழ். குடாநாட்டுப் பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் வருகை தரவில்லை என எமது நிருபர் தெரிவித்துள்ளார்.
யாழ். தென்மராட்சி பிரதேச பாடசாலைகளின் காட்சிகளே இவை.
மேலும், வங்கிகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-